கொழும்பில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த நபரால் பரபரப்பு..!

கொழும்பு காலி முகத்துவார கடற்கரையில் சிறுமியை கடத்தி தப்பி ஓட முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அத்தோடு தப்பி ஓட முயற்சித்த நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாய் மற்றும் தந்தையுடன் வந்த ஏழு வயது சிறுமியையே கடத்தி தப்பி ஓட முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடுபுசெல்லாவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.