கொழும்பில் நாளைய தினம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில்…

கொழும்பில் பல பிரதேசங்களில் நாளைய(19) தினம் 12 மணி நேர நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.

அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுக்கும் மின்சார பரிமாற்ற அமைப்பில் மேற்கொள்ளவேண்டிய பராமரிப்பு செயற்பாடுகள்  காரணமாக இவ்வாறு நீர் வெட்டு அமுல்  படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொடிகாவத்த, முல்லேரியாவ, ரத்மலானை, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.