கொழும்பில் 100 Wi-Fi வலயங்கள் ஆரம்பிக்கத் திட்டம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக இலவச Wi-Fi சேவையை நாடுமுழுவதிலும் விரிவுபடுத்தும் ஒரு கட்ட வேலைத்திட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாநகரசபையின் தலைமையில் இதன் முதற்கட்ட நடவடிக்கையாக 20 Wi-Fi வலயங்களை ஆரம்பிப்பதற்கு தற்பொழுது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 10க்கும் மேற்பட்ட Wi-Fi வலயங்கள் செயற்பட்டு வருகின்றன.

இதேவேளை, கொழும்பு நகரத்தை உள்ளடக்கிய வகையில் 100 Wi-Fi வலயம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, பொது Wi-Fi வலயங்களை கவரும் வகையில் Wi-Fi வசதிகளுக்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிக்கான வசதிகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கான வசதிகள் தொடர்பான தகவல்களையும் இந்த இயந்திரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.