‘கொழும்புக்கு பால் – கிராமத்திற்கு வெள்ளரியா? – கொழும்புக்கு மின்வெட்டு இல்லை..

(FASTNEWS | COLOMBO) – நிலவும் சுழற்சி முறைமையிலான மின் வெட்டு நேர அட்டவணையின்படி, மின்வெட்டு அமுலாகி இருந்தாலும், கொழும்பிற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில் கிளைகளில் மின்சார உபகரணங்கள் அதிகளவு பாவிக்கப்பட நேரிடவுள்ளதாக கோரிய கோரிக்கைக்கு அமைய மெகாவாட் 50 அளவில் மின் வழங்குவதால் கொழும்பு நகருக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.