(FASTGOSSIP| COLOMBO) – கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேச குப்பைகள் வேறு பிரதேச குப்பை வண்டிகளில் ஏற்றுக் கொள்ளப்படாமை தொடர்பில் கொழும்பு நகருக்கு உட்புகும் வாகனங்களிற்கு வரிப்பணம் அறவிட திட்டம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு நகருக்கு உட்புகும் வாகனங்களினால் அறவிடப்படும் வரிப்பணம் நகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களது சுகாதார நலன்களுக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.