கொழும்பு அதிவேக வீதியில் களனி – வத்தளை நுழைவாய்க்கு பூட்டு…

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில், புதிய களனி பாலத்திற்கு அருகில் களனி மற்றும் வத்தளை திசைக்கு நுழையும் வீதி இன்று(10) காலை முதல் மூடப்பட்டுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் காரணமாகவே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மாற்று வீதிகளாக பேலியகொடயினூடாக கொழும்பு – கண்டி பிரதான வீதியை பயன்படுத்த முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.