கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ஆனந்த கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், கல்வியமைச்சரின் தலைமையில் நாளை(22) மேற்படி கட்டிடடத்திற்கான திறப்பு விழா இடம்பெறவுள்ளதாக தெரிவித்து மாணவர்கள், பெற்றார் மற்றும் பழைய மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், குறித்த நடவடிக்கையை எதிர்க்கும் முகமாக இன்று(21) காலை 6 மணி தொடக்கம் இரண்டு மணி நேரத்திற்கு கல்லூரிக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றிலும் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.