கொழும்பு, ஆமர் வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெசேன்ஜர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காரில் பயணம் செய்த குறித்த நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
—————————————————–UPDATE
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்…
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காரில் பயணம் செய்த குறித்த நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
-Riz