கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடை

அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர திருத்தவேலைகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பிரதான நீர்க்குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்பினாலேயே நீர்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு நகர சபைப் பிரதேசம், ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல நகர சபை பிரிவுகளில் நீர்விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொலன்னாவ, பொரலஸ்கமுவ ஆகிய நகர சபை பிரதேசங்கள் உட்பட்ட பல பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அம்பத்தலே நீர்சுத்திகரிப்பு நிலைய மேற்கு மத்திய பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் எம்.கே.ஹப்புஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.