கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 24 மணித்தியால நீர் விநியோக தடை…

(FASTNEWS|COLOMBO) மின்சார சபையின் மின் வெட்டு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக, நாளை(30) காலை 09 மணி முதல் 31 திகதி காலை 09 மணி வரை, 24 மணித்தியாலம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவளை மாநாகர சபை அதிகார பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை அதிகார பிரதேசங்களிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை அதிகார பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பிரதேசங்களிலும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.