கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணி காரணமாக நாளை மறுதினம்(22) காலை 09 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 15 மணித்தியாலங்கள் கொழும்பு பிரதேச பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு – தெஹிவளை – கல்கிஸ்ஸை கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர்ந்த கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு பகுதிகளிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளது.