இலங்கை கொழும்பு கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள MSC டெனியலா கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதும் , இன்னும் அதிலிருந்து புகை வௌிவந்து கொண்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
அதனை முழுமையாக அணைப்பதற்கு இலங்கை கடற்படை தொடர்ந்தும் செயற்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தீயிணை கட்டுப்படுத்துவதற்காக ஆதரவை வழங்கிய இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான கப்பல் இன்று(08) மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.