அத்தியாவசியத் திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பக்க வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, வாகனங்களின் வேகத்தை மட்டுபடுத்தி, ஒரு பக்க பாதையில் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த மாதம் நிறைவடையும் வரை குறித்த அத்தியாவசிய திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு நடவடிக்கை பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.