புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு…

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலவ்வ மற்றும் பொல்கஹவலை புகையிரத நிலையங்களுக்கு அருகில் வைத்தே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது..

குறித்த புகையிரதத்தை அலவ்வ புகையிரத நிலையத்துக்கு மற்றொரு புகையிரதத்தின் உதவியுடன் இழுத்துச் சென்று கொண்டிருப்பதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது..