கொழும்பு – கண்டி வீதியில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு..

கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்ததால் கொழும்பு – கண்டி வீதியில் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளது.
 
இன்று(05) அதிகாலை பொருட்களை ஏற்றிச் சென்ற குறித்த கொள்கலன் பாரவூர்தி தொரன சந்தியில் அதிகவேக பாதைக்கு நுழையும் மாற்று பாதையில் கவிழ்ந்தது.
 
தற்போது கவிழ்ந்த கொள்கலன் வீதியில் இருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், விபத்தில் காயமடைந்த அதன் சாரதி மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
 
குறித்த கொள்கலன் கவிழ்ந்ததால் இன்று காலை அந்த வீதியில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

(rizmira)