கொழும்பு – காங்கேசன்துறை புகையிரதம் தடம்புரல்வு.. (Photos)

இன்று(03) காலை கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த ‘உத்தரதேவி’ கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அண்மையில் ரயில் பாதையினை விட்டும் விலகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.. இதன் போது, எந்தவித உயிர்ப்பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(02) கொழும்பிலிருந்தான பயணத்தை முடித்த உத்தரதேவி, இன்று(03) காலை 6.15 இற்கு யாழ். ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு பயணிக்க இருந்த நிலையில், காலை 5.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட போது, ‘தடுப்புக்கள்’ செயலிழந்த நிலையில், வீதியில் பாய்ந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்சமயம் புகையிரதத் தடங்கள் சேதமடைந்துள்ளதுடன், ரயில் பெட்டிகளையும் மீட்கும் பணிகள் இடம்பெறுவதால், காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் ரயில் நிலையம் வரையிலேயே, ஏனைய ரயில் சேவைகளை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.