கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவல வனப் பகுதியில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை ஜூலை 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முத்துராஜவல பகுதியைச் சேர்ந்த 35 பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனுவின் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதகார சபை போன்ற நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மனு தொடர்பிலான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள கால அவகாசம் தேவை என, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது