கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு 100 வருடங்கள் நிறைவு..

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவு பெறுகின்றது.

1917ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் பாரிய அளவில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக்காலப் பகுதியில் 1 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

 

(rizmira)