எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மறு நாள் அதிகாலை 2 மணி வரை கொழும்பு பகுதியில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, ஸ்ரீஜயவர்தனபுர,கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் சொய்சாபுர குடியிருப்பு பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.