கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டு வரும் துறைமுக நகரத்தின் முதலாவது காணி ஏல விற்பனை அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சகல அதிவேக நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் கொழும்பில் ஒரு மத்திய நிலையம் நிர்மாணிக்கப்படும்.
இஞ்சிக்கடை சந்தி, துறைமுகம் ஊடாக கொழும்பு கோட்டைக்கு புதிய பாதை நிர்மாணிக்கப்படும். அந்த பாதை மல்வத்தை வீதி ஊடாக கோட்டை புகையிரத நிலையம் வரை செல்லும். குறித்த அந்த இடத்தில் இருக்கும் சாமர்ஸ் கலரியில் 9 ஏக்கர் நிலம் உள்ளது.
அங்கு பெரிய வர்த்தக கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)