கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாகனங்களுக்கு விசேட தரிப்பிட வசதிகள்…

இன்று(21) ஆரம்பமாகி எதிர்வரும் 30ம் திகதிக்கு நிறைவு பெறவுள்ள 2018 கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்காக வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்றினை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த கண்காட்சிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தினை அண்டிய வீதிகளில் குறித்த காலப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்க தரிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும் விதம் தொடர்பில் கீழே உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.