கொழும்பு தேசிய மருத்துவமனையில் தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு…

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் நேற்று(24) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் மற்றும் சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் 4.5 பில்லியன் ரூபா மொத்த செலவில்; நிர்மாணிக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையம் மக்களின் பாவனைக்கு ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது.

10 மாடிகளைக் கொண்ட இந்த தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையமானது உலகிலுள்ள அதிஉயர் தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டிருப்பதுடன் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் மருந்தகம், நடமாடும் கதிரியக்க நோய் நிர்ணய பிரிவு, சுகாதாரக் கல்விப் பிரிவு மற்றும் பொதுமக்கள் தொடர்பு கட்டமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது.

தேசிய வலிப்பு நோய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியையும் ஜனாதிபதி இதன்போது பதிவு செய்துள்ளார்.