கொழும்பு நகரத்தில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், பத்தரமுல்லையில் இருந்து கொழும்பு வரை சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு தனியான வீதி பகுதி அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சில மணித்தியாலங்கள் குறித்த வீதி ஒழுங்கை பஸ் போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்டும் எனவும் கொழும்பு நகரத்துக்குள் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தால் கொழும்பு நகரத்தை அண்மித்த பகுதிகளில் ஏற்படும் வாகன விபத்துகள் குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.