கொழும்பு பங்குச் சந்தை கடந்த ஒரு வருடகாலப் பகுதிக்குள் 25 ஆயிரத்து 700 கோடி ரூபா பெறுமதி இழப்பை எதிர்கொண்டு பாரிய வீழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இதற்கேற்ப ஒரு வருடத்துக்கு முன்னர் 2931 பில்லியன்களாக இருந்த பங்குச் சந்தையின் மொத்தப் பெறுமதி தற்போது 2674 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த ஒரு வருடகாலப்பகுதிக்குள் கொழும்பு பங்குச் சந்தையின் சராசரி பங்குவிலை 6914 ரூபாவிலிருந்து 6276 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 638 ரூபா பெறுமதி வீழ்ச்சியாகும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையில் வீழ்ச்சி, மற்றும் அந்நிய முதலீடுகள் மீளப் பெறப்பட்டமை போன்ற காரணிகளே பங்குச் சந்தை வீழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது