பிரபல பாடசாலைகளுக்கு பிள்ளைகளை சேர்ப்பது என்பது அனைத்து பெற்றோர்களினதும் ஆசையே.. அவ்வாறே கொழும்பிலுள்ள பிரபல மகளிர் பாடசாலைக்கு மாணவி ஒருவரை சேர்ப்பதாக கூறி ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD)அவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கல்வியமைச்சில் சேவையாற்றுவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கண்டியை சேர்ந்த குறித்த நபர், அவர் நேற்று(04) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அவர் ஏலவே கண்டி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஆசிரியர் நியமனம் பெற்று தருவதாக கூறி, 50,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றிருந்ததாகவும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
#g- reesh