கொழும்பு மருத்துவபீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாலபே தனியார் மருத்துவ பீட மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாலபே பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனுமதி வழங்கியமையானது தமது மதிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.