கொழும்பு – மாத்தறை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

காலி பஸ்தரிப்பு சுற்று வட்டத்திலிருந்து இன்று(16) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் காலி சமுத்திரா மாவத்தை வரையிலும், மீன்விற்பனை நிலைய சந்திக்கு அருகாமையில் கொழும்பு மாத்தறை பிரதான வீதி மூடப்படுமென்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

தென்மாகாணத்தில் படையினர் தின வைபவம் இடம்பெறுவது காரணமாகவே இவ்வாறு வீதி மூடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)