கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பணி இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நீதிச்சேவைகள் ஆணைக்குழுவே இந்தப் பணியை இடைநிறுத்தியுள்ளது.

இதேவேளை இந்த பணி இடைநிறுத்தம் பற்றி திலின கமகேவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திலின கமகே சட்ட விரோதமான முறையில் யானைக் குட்டி ஒன்றை வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.