கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.