கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் நீர் விநியோகம் நாளை(18) தடைப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையில் 12 மணித்தியாலங்கள் களனி பிரதேச சபையை சேர்ந்த பகுதிகள், பேலியகொட நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், வத்தளை நகர சபையை சேர்ந்த பிரதேசங்கள், ஹெந்தல பிரதேச சபையை சேர்ந்த பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.