கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட அளவில் விநியோகிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று(21) மாலை 06 மணி முதல் இன்று(22) மாலை 06 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, பொரள்ளை, மருதானை ஆகிய பிரதேசங்களிலே நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட உள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.