கொவிட் 19 – மகனுக்கு தொற்று இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான முதல் நபர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த நபரின் மகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை என பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அரசு குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.