வடபசுபிக் கடல் பிராந்தியத்திற்கும் தென் பசுபிக் பிராந்தியத்திற்கும் இடையே அமைந்துள்ள கொஸ்டா ரிக்காவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சர்வதேச புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.