கோடிகளை புறக்கணித்த ஷேவாக்

ஐபிஎல் தொடரின் புதிய அணியான ராஜ்கோட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட வந்த வாய்ப்பை ஷேவாக் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக், கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நாளை துபாயில் தொடங்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன் லீக் தொடரில் பங்கேற்கவுள்ளார். இந்த தொடரில் ஜெமினி அரேபியன்ஸ் அணியை அவர் வழிநடத்துகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் புதிதாக இணைக்கப்பட்ட ராஜ்கோட் அணி நிர்வாகம் அதிக சம்பளத்திற்கு ஷேவாக்கை பயிற்சியாளராக செயல்பட அணுகியுள்ளது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்தே முன்னாள் இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை அந்த அணி பயிற்சியாளாராக நியமித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் ஆலோசகராக செயல்படும் வாய்ப்பும் ஷேவாக்கிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.