கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை விற்று இதுவரையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
எனினும் தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் மற்றும் பசில் ராஜபக்ச எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் கூட்டம் சேரவில்லை என் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புதிய கட்சியை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு தேவை என்பதை பசில் நன்று அறிந்துள்ளார்.
இதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து மக்களை தொகையை பெருக்க பசில் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஆட்சி அதிகாரம் ராஜபக்ஷ ரெஜிமென்டிடம் பறிக்கப்பட்ட பின்னர், உணவு பொட்டலங்களை பெறவும் மதுபானம் அருந்தும் மக்கள் கூட்டமே அவர்களை சுற்றி காணப்பட்டனர்.
எனினும் தற்போது நல்லாட்சி அரசாங்கம் சுமுகமான நிலையை நோக்கி நகர்ந்து வருகையில், மக்களின் மனங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மிகவும் பலமிழந்து போயுள்ளது. இது ராஜபக்ஷ ரெஜிமென்டின் அரசியல் கனவுக்கு புதைகுழியாகவும் மாறும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் பசில் ராஜபக்ஷவினால் பல பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளது.
எவ்வளவு பெரிய விலை கொடுத்தும் மக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பசில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை ராஜபக்ஷர்கள் உருவாக்கப்படும் கட்சியில் இணைந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 25 கோடி ரூபாவுக்கு மேல் வழங்க பசில் பேரம் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.