முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று(27) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண பணியின் போது பல மில்லியன் ரூபா முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டிசம்பர் மாதம் 04ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.