முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் 04ம் திகதி முதல் தொடர் விசாரணை செய்வதற்கு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டுள்ளது.
——————————————————————–(UPDATE)
கோட்டபாய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.