(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதத்க்கது.