கோட்டாபயவிற்கு 5 வருட சிறையா? விடுதலையா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், 2005ஆம் ஆண்டு அமெரிக்கர் என்ற ரீதியில் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஸ சட்டவிரோதமாக வாக்களித்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க குடிமகனாக இருந்த போது, 2005ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயரும் அவருடைய மனைவியின் பெயரும் சட்டவிரோதமாக உள்ளடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய 2005ஆம் ஆண்டு மெதமுலன வீட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், வாக்களித்த தேர்தல் நிலையங்களில் கடமையாற்றிய அதிகாரிகள், கிராம சேவகர், உட்பட பலரிடம் விசாரணை மேற்கொள்ள குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.

அதற்கமைய சட்டவிரோதமாக கோட்டாபய தனது வாக்கினை பயன்படுத்திருப்பது உறுதியாகினால், அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியிட்டுள்ளன.