(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் வகையில், பிவித்துரு ஹெல உறுமயவினால், “உறுமயக உதாவ” எனும் தொனிப் பொருளில் மாநாடொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றலுடன், எதிர்வரும் 01 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு, பெலவத்தையில் அமைந்துள்ள, புத்ததாஸ விளையாட்டு மைதானத்தில் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது.