எவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் தனியார் நிறுவனத்தை மிதக்கும் ஆயுத கிடங்காக பராமரித்துச் செல்ல அனுமதியளித்து அரசிற்கு 1,140 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரால் தொடரப்பட்ட வழக்கு இன்று(11) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பிரதிவாதிகளின் அடிப்படை எதிர்ப்பு மனு எழுத்து மூலமாக இன்று(11) சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், வழக்கை தாக்கல் செய்த இலஞ்ச ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் தனது அடிப்படை எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்யவில்லை.
இதன் காரணமாக , இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முன்னால் எழுத்து மூல மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவற்றை ஆராய்ந்து , குறித்த இந்த வழங்கை தொடர்ந்தும் நடாத்துதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 17ம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)