பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கினை, எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
UPDATE –
கோட்டாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்…
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்காக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.