கோட்டாவுக்கு இரண்டு நீதிமன்ற உத்தரவுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரால் இரண்டு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. 


2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அமெரிக்க குடிமகனாக இருந்த போது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியில் செயற்பாடுகளில் ஈடுபட்டதன் ஊடாக குடிஉரிமைச் சட்டம், குடிவரவு, குடியகல்வு சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டங்களை மீறியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் ஹம்பாந்தோட்டை உதவி தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரகசிய பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றை ஏற்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.