கோட்டாவே ஜனாதிபதி – எந்தவொரு பந்தயத்திற்கும் தயார் – சிறிசேன

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவது நிச்சயம் என பிரபல வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவர் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பயணத்தில் மிகவும் நெருங்கி இருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு இருக்க, கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவது உறுதி அது தொடர்பில் தான் பெறுமதிமிக்க எந்தவொரு பொருளையும் வைத்து பந்தயம் பிடிக்க தயார் என தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.