(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ராஜித சேனாரத்ன மற்றும் பாட்டளி சம்பிக்க ரணவக்க ஆகியோரை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வந்த முன்னுதாரணத்தினை தான் விரும்புவதாகும் சட்டத்திற்கு முன் பிரிவினை பார்ப்பதை தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியானது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையக் காரணம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாடுகளே என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தமை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
” நாம் கோஹ்லிக்கு எந்தளவு ஏசுகிறோம், அவர் குற்றம் புரிந்தார் என்றதற்காவா.. இல்லையே.. அவ்வாறு தான் ஜனாதிபதி தேர்தலின் போதும், நாம் எமது வேட்பாளரை வெற்றியடையச் செய்ய எம்மால் இயன்றதனை செய்தோம்.
இவற்றினை எளிதாக கருத் முடியாது.. ஜனாதிபதிக்கு அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்றவாறு வேலை செய்ய இடமளிக்க வேண்டும்..ஜனாதிபதி அண்மையில் RMV சென்றிருந்தார். அது உண்மையிலேயே சூப்பர் வேலை… அவ்வாறானவற்றுக்கு நான் டபல் செலூட் அடிப்பேன்..” எனத் தெரிவித்திருந்தார்.