முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு சுமார் 58 இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு வழங்கி வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எட்டு உயர் இராணுவ அதிகாரிகளும், ஐம்பது படை வீரர்களும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
கோதபாயவிற்கு நிலவி வரும் உயிர் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு இவ்வாறு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பதவி வகித்த வேறு எந்தவொரு முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்ச அளவில் கோதபாய ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.