(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.