முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் ஆஜராகியுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் இன்றும் கோத்தபாய ராஜபக்ச வாக்கு மூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.
நேற்றைய தினமும் அவர் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகியிருந்தார்.
மேலும், ரக்னா லங்கா நிறுவனம் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(riz)