கோத்தபாய இன்று நீதிமன்ற முன்னிலையில் – கைது செய்ய வாய்ப்புள்ளதாக ஆரூடம்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று(01) நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

மேலும் அவர் இன்று கைது செய்யப்படலாம் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அரச சார்பான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கோத்தபாயவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ள எவன்கார்ட் வழக்கு விசாரணை நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் அனைத்து ஆவணங்களும் சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், நீதிமன்றில் இன்று ஆஜராகும் கோத்தபாயவிடம் விளக்கம் கோரப்படவுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நடைபெற்ற போது கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன்போது சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் உத்தரவிடப்பட்ட நிலையில், சந்தேகநபர்களுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.