கோத்தபாய உள்ளிட்ட 08 பேரும் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த எட்டுப் பேருக்கும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாய உள்ளிட்ட 08 பேர் நீதிமன்றில் ஆஜர்.. (1ம் இணைப்பு)
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி ஆறு முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
காலி துறைமுகத்தில் அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சிய கப்பலை இயக்கியமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.